ADDED : டிச 18, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கிராமத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டங்களுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நேற்று ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஹைதர் அலி கிராம மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும் அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்துவது குறித்து கலந்து ஆலோசித்தவர், தொடர்ந்து போராடினால் மட்டுமே அனுமதி ரத்து செய்யப்படும் என்றார்.