/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள 86 கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

ADDED : ஜூலை 26, 2025 04:39 AM
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்கிரமித்திருந்த 86 கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள இந்த தெப்பக்குளத்தைச் சுற்றி எலக்ட்ரானிக்ஸ் விற்பனை, சர்வீஸ் கடைகள் உள்ளன. குளத்தின் கரையை மறைத்து கடைகள் வைத்துள்ளதால் நடுவே உள்ள கலைநயமிக்க நீராழி மண்டபத்தின் தோற்றம் வெளியே தெரிவதில்லை. கடைகளின் கழிவுநீர், குப்பை சேருமிடமாகவும் தெப்பக்குளம் மாற்றப்பட்டது. இதனால் கடைகளை காலி செய்யுமாறு உரிமையாளர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் கோயில் நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருமாள் தெப்பக்குளம் சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். மேல் முறையீடு, தொடர் வழக்கு என அனைத்தும் தள்ளுபடியான நிலையில் கடந்தாண்டு ஜூலையில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். 2025 மார்ச் 30 வரை கடைகளை பயன்படுத்திக்கொள்ள வியாபாரிகளுக்கு நீதிமன்றம் அவகாசம் கொடுத்தது. கெடு முடிந்த நிலையில் உச்சநீதிமன்றத்தை அணுகினர்.
நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் கொண்ட அமர்வு, கடைகளை காலி செய்யும் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதன்மூலம் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள 86 கடைகளை அறநிலையத்துறை அகற்ற உள்ளது.