ADDED : ஆக 20, 2025 01:43 AM

மதுரை; சென்னையில் மத்திய அரசின் கேலோ இந்தியா அஸ்மிதா பெண்கள் டேக்வாண்டோ லீக் போட்டி, மாநில அளவிலான சப் ஜூனியர், சீனியர் டேக்வாண்டோ போட்டி டேக்வாண்டோ அசோசியேஷன் தமிழ்நாடு சார்பில் நடந்தது.
இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மதுரையை சேர்ந்த மாணவர்கள் 6 தங்கம், 2 வெள்ளி, 12 வெண்கல பதக்கங்களை வென்றனர்.
கேலோ இந்தியா டேக்வாண்டோ லீக் போட்டியில் ராகவி தங்கம் வென்றார், சம்யுக்தா வெள்ளி வென்றார், வைஷ்ணவி, சாஷினி, வருணிதா, புவனேஸ்வரி, ஸ்வேதா, பிரேமா, ஹர்ஷினி ஸ்ரீ வெண்கல பதக்கம் வென்றனர். மாநில டேக்வாண்டோ போட்டியில் நரேன், நாராயணன், முத்து ஹரிஷ், ருத்ரா, பிரபு தங்கம் வென்றனர். தாரகேஷ் ராஜன் வெள்ளி வென்றார். ஆஷிகா, நிகில், உதய கிருஷ்ணன், காவியா ஸ்ரீ, ஷர்வின், கிரிஷாந்த் வெண்கலம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர்கள் நாராயணன், கார்த்திக், பிரகாஷ் குமார், சஞ்சீவ் பாராட்டினர்.