/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை ரயில்வே ஸ்டேஷனை கொஞ்சம் பாருங்க... பராமரிங்க... பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்துங்க

ADDED : செப் 23, 2024 04:43 AM

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் நடைமேடை 1ல் உள்ள பல அறிவிப்பு டி.வி க்கள் செயல்பாடின்றி இருப்பதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
தமிழகத்தின் முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் மதுரையும் ஒன்று. இங்கு தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.
பிரதமர் மோடி செப். 1ல் புதிதாக அறிமுகப்படுத்திய பெங்களூரு --- மதுரை, சென்னை - -நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களால் பயணிகள் தற்போது கூடுதலாக ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
நீண்டதுாரம் செல்லும் பெரும்பாலான ரயில்கள் பயணிகளின் வசதிக்காக ரயில்வே ஸ்டேஷனின் முதல் நடைமேடையில் நின்று செல்கின்றன. ஆனால் இந்த நடைமேடையின் பல இடங்களில் 'கோச்' நிற்கும் இடங்களை காட்டும் 'டிஸ்பிளேக்'கள் செயல்பாடின்றி உள்ளன.
இதனால் பயணிகள் 'கோச்' வரும் நேரம், நிற்கும் இடம் தெரியாமல் தவிக்கின்றனர். இந்த விவரங்களை ரயில்வே ஊழியர்களை தேடி கண்டுபிடித்து கேட்கின்றனர்.
பயணிகள் உட்காரும் இருக்கைகள் பல சேதமடைந்துள்ளன. சில இருக்கைகளை 'செங்கலால்' முட்டு கொடுத்து பயணிகள் உட்கார ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் பயணிகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. நடைமேடை ஆங்காங்கே சேதமடைந்து 'மதுரை மாநகராட்சி ரோடுகள்' போல காட்சியளிக்கின்றன. அவற்றை விரைந்து சரிசெய்ய வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு.