/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவர்களுக்கான தனித்திறன் போட்டிகள்
/
மாணவர்களுக்கான தனித்திறன் போட்டிகள்
ADDED : நவ 02, 2025 04:30 AM
நாகமலை: நாகமலை எஸ்.பி.ஓ.ஏ., சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில், பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் நடந்தன.
எஸ்.பி.ஐ.ஓ.ஏ., கல்வி அறக்கட்டளை செயலர் செந்தில் ரமேஷ் வழிகாட்டுதலில், கே.ஜி., முதல் 2ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போட்டிகள் நடந்தன. நிர்வாக அதிகாரி சீதாலட்சுமி, முதல்வர் லதா திரவியம் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாணவி நிகிதா வரவேற்றார். பொம்மலாட்டம், குழு நடனம், நினைவுச் சின்னங்களை அடையாளம் காணுதல், உடை அலங்காரம், பாட்டுப் பாடுதல் உட்பட 20 வகையான போட்டிகள் நடந்தன.
துணை முதல்வர் அனிதா கரோலின், ''போட்டி நிறைந்த உலகில் தனித்திறன் உடையவர்களேவாழ்வில் வெற்றி பெறுகின்றனர். மாணவர்கள் இது போன்ற திறன்களைவளர்த்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.மாணவர் ஆக்னலின் மெலிற்றா நன்றி கூறினார். தலைமையாசிரியர் பொற்கொடி, சிறார்ப் பிரிவுதலைமையாசிரியர் ஹெப்சிபா சலோமி ராணி ஆகியோர் பரிசு வழங்கினர்.ஒட்டுமொத்தப் பள்ளிக்கான பரிசை, ஓம் சாதனா பள்ளி வென்றது. 22 பள்ளிகளைச் சேர்ந்த 278 மாணவர்கள் பங்கேற்றனர்.

