/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காட்டுவிலங்குகளை கட்டுப்படுத்த தமிழக அரசு தயங்குவதேன் *விவசாயிகள் கேள்வி
/
காட்டுவிலங்குகளை கட்டுப்படுத்த தமிழக அரசு தயங்குவதேன் *விவசாயிகள் கேள்வி
காட்டுவிலங்குகளை கட்டுப்படுத்த தமிழக அரசு தயங்குவதேன் *விவசாயிகள் கேள்வி
காட்டுவிலங்குகளை கட்டுப்படுத்த தமிழக அரசு தயங்குவதேன் *விவசாயிகள் கேள்வி
ADDED : அக் 21, 2025 05:02 AM
மதுரை: விளைநிலங்களை, பயிர்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியும் தமிழக அரசு செயல்படுத்தாதது ஏன் என விவசாயிகள் கேள்வியெழுப்புகின்றனர்.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2015 ம் ஆண்டு திருத்தம் குறித்து பாரதிய கிசான் சங்க தேசிய தலைவர் சாய்ரெட்டி, துணைத்தலைவர் பெருமாள் கூறியதாவது:
மலைப்பகுதி, மலையடிவாரம், கிராமம் என்பதை கடந்து தற்போது நகர்ப்புறங்களிலும் காட்டுப்பன்றிகள் வருகின்றன. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2015 ல் மத்திய அரசு ஒரு திருத்தம் கொண்டு வந்தது. விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அந்தந்த மாநில அரசுகளே மயில், காட்டுப்பன்றி உட்பட 16 விலங்குகளை கொல்வதற்கு சட்ட திருத்தத்தின் மூலம் மத்திய அரசு அனுமதி வழங்கியது.
கேரளா, கோவா முன்னுதாரணம் கேரளாவில் காட்டுப்பன்றிகளையும் கோவாவில் மயில்களையும் கொல்வதற்கு அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. தமிழக அரசின் உத்தரவில் மலையடிவாரத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவிற்குள் வந்தால் மட்டுமே அவற்றை சுடவேண்டும் என்ற உத்தரவு உள்ளது. மலையடிவாரத்தில் சிறு நுாறு மீட்டர் துாரத்திலேயே விவசாயிகளின் பட்டா நிலம் உள்ளதால் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தினாலும் அரசு வேடிக்கை பார்க்கிறது.
வனத்துறை நிலங்களில் மாடுகள் மேய்ந்தால் வனத்துறை அபராதம் விதிக்கிறது. அதைப்போல விவசாய நிலங்களில் வன விலங்குகள் சேதப்படுத்தினால் அதற்கும் முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு வேட்டையாடுவதற்கு அரசு அனுமதி தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.