/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜாதிக் கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாநிலம் தமிழகம்; மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் விமர்சனம்
/
ஜாதிக் கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாநிலம் தமிழகம்; மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் விமர்சனம்
ஜாதிக் கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாநிலம் தமிழகம்; மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் விமர்சனம்
ஜாதிக் கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாநிலம் தமிழகம்; மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் விமர்சனம்
UPDATED : ஆக 30, 2025 08:14 AM
ADDED : ஆக 30, 2025 04:09 AM

மதுரை: 'ஜாதி பெயர்களில் வாட்ஸ் ஆப் குழுக்களை காவல்துறையினர், ஆசிரியர்கள் நடத்தி வருவதாகவும், அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள ஒரே சமூக அதிகாரிகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்' எனவும் மார்க்கிஸ்ட்
மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் 'நாட்டைக் காப்போம்' அமைப்பின் சார்பில் ஆணவக் கொலைக்கு எதிரான கருத்தரங்கம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பேசியதாவது: ஜாதிக் கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடியை அறிவிக்க வேண்டும். ஜாதிய கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாநிலத்தில் ஒன்றாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது.
மாநிலத்தின் இருபெரும் கட்சிகளும், ஆட்சியை தக்க வைக்க ஜாதி வேட்பாளர்களை போட்டியிட வைத்து மக்களை பிளவுப்படுத்துகின்றனர். கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலத்தில் இத்தனை சாதிய படுகொலைகள் நடப்பது தமிழகத்திற்கு அவமானம், என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போலீசார், ஆசிரியர்கள் ஜாதிய வாட்ஸ் ஆப் குரூப்புகளில் இருப்பது மக்களிடையே பாகுபாடுகளை வலுப்படுத்தும். தமிழகத்தில் தொடர்ந்து ஆணவக் கொலைகள் நடப்பதால் காதலர்களை காக்க வேண்டிய சூழல் இருக்கிறது. சட்டப்படியான காதலர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் திருமணத்தை மார்க்சிஸ்ட் நடத்தி வைக்கும். பெற்றோர் சம்மதத்துடன் நடத்தி வைக்கவும் முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். நாங்கள் ஜாதி மறுப்பு திருமணம் செய்துவைப்போம் என்றதற்கு வரவேற்பு கிடைத்ததால், பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையும் மக்களை ஏமாற்ற தாங்களும் அதேமாதிரி திருமணம் நடத்தி வைப்பதாக கூறுகி றார்.