sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 17 கோடி பேர் பார்வையிட்ட  தமிழ் இணைய நுாலகம் 

/

 17 கோடி பேர் பார்வையிட்ட  தமிழ் இணைய நுாலகம் 

 17 கோடி பேர் பார்வையிட்ட  தமிழ் இணைய நுாலகம் 

 17 கோடி பேர் பார்வையிட்ட  தமிழ் இணைய நுாலகம் 


ADDED : நவ 13, 2025 06:08 AM

Google News

ADDED : நவ 13, 2025 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''தமிழ் இணைய நுாலகத்தை 17 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்'' என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜன் மதுரையில் பேசினார்.

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் தமிழியக்க 8 ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:

மாநில அரசுகளின் உரிமைகளை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார். நாட்டில் எங்கேயும் இல்லாத வகையில் அகழாய்வு இடத்திற்கு அருகிலேயே உள்ளவாறு கீழடி அருங்காட்சியம் அமைத்துள்ளோம். கீழடியில் தோண்ட, தோண்ட கி.மு., 800 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கிடைத்து வருவது தமிழ் வரலாற்றின் தொன்மையை உணர்த்துகிறது.

தமிழ் இணைய நுாலகத்தை கணினியுகத்திற்கு ஏற்ப லட்சக்கணக்கான நுால்களை இலவசமாக படிக்கும் வகையில் நவீனப்படுத்தியுள்ளோம். இதில் 2015 முதல் 2021 வரை 1.5 கோடியாக இருந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை தற்போது 17 கோடியாக உயர்ந்துள்ளது. உலகளவில் 199 தமிழ்ச் சங்கங்கள் தமிழ் இணைய நுாலகத்தை பயன்படுத்த இணைந்துள்ளன என்றார்.

தியாகராஜர் கல்லுாரித் தாளாளர் ஹரி தியாகராஜன், தமிழியக்க பொதுச் செயலாளர் அப்துல்காதர், மாநில செயலாளர் சுகுமார், பொருளாளர் பதுமனார், கவிஞர் அறிவுமதி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us