/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிறுவனங்களின் 'குரூப் இன்சூரன்ஸ்'க்கும் வரிவிலக்கு தேவை எல்.ஐ.சி., மருத்துவ காப்பீடு மீதான ஜி.எஸ்.டி., வரிநீக்கத்திற்கு வரவேற்பு
/
நிறுவனங்களின் 'குரூப் இன்சூரன்ஸ்'க்கும் வரிவிலக்கு தேவை எல்.ஐ.சி., மருத்துவ காப்பீடு மீதான ஜி.எஸ்.டி., வரிநீக்கத்திற்கு வரவேற்பு
நிறுவனங்களின் 'குரூப் இன்சூரன்ஸ்'க்கும் வரிவிலக்கு தேவை எல்.ஐ.சி., மருத்துவ காப்பீடு மீதான ஜி.எஸ்.டி., வரிநீக்கத்திற்கு வரவேற்பு
நிறுவனங்களின் 'குரூப் இன்சூரன்ஸ்'க்கும் வரிவிலக்கு தேவை எல்.ஐ.சி., மருத்துவ காப்பீடு மீதான ஜி.எஸ்.டி., வரிநீக்கத்திற்கு வரவேற்பு
ADDED : செப் 05, 2025 11:41 PM
மதுரை: எல்.ஐ.சி., 'மெடி கிளெய்ம்' எனப்படும் மருத்துவ காப்பீட்டு பாலிசிக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி நீக்கப்பட்டதை வரவேற்கும் எல்.ஐ.சி., பொது இன்சூரன்ஸ் சங்கத்தினர், நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்காக எடுத்துள்ள 'குரூப் இன்சூரன்ஸ்' திட்டத்திற்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டுமென தெரிவித்தனர்.
புதுப்பிக்கும் போது வரி கட்டுவதா ரமேஷ்கண்ணன், கோட்ட பொதுச் செயலாளர், அகில இந்திய எல்.ஐ.சி., ஊழியர்கள் சங்கம்: ரூ.ஒரு லட்சம் இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு ரூ.18 ஆயிரம் ஜி.எஸ்.டி.,யா என மலைத்துப் போய் லட்சக்கணக்கானோர் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க விரும்பாமல் தவிர்த்தனர். உலகத்திலேயே வேறு எந்த நாட்டிலுமே லைப் இன்சூரன்ஸ் பாலிசிக்கு ஜி.எஸ்.டி., வரியோ, சேவை வரியோ விதிக்கப்படவில்லை என 300 எம்.பி.,க்களிடம் விளக்கி பார்லிமென்டிலும் விவாதம் நடத்த வைத்தோம். எங்களது போராட்டத்திற்கு மத்திய அரசு செவி சாய்த்துள்ளது. எல்.ஐ.சி., தனியார் பாலிசிகளுக்கான ஜி.எஸ்.டி., வரியை நீக்கியுள்ளது. அதேநேரத்தில் கடந்தாண்டு, அதற்கு முந்தைய ஆண்டுகளில் பாலிசி எடுத்தவர்கள் பாலிசியை புதுப்பிக்கும் போதோ, தொடர்ந்து பணம் கட்டும் போதோ ஜி.எஸ்.டி., கட்ட வேண்டுமா என்பதை தெளிவுப்படுத்தவில்லை. முழுமையாக வரிநீக்கம் செய்யவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
குரூப் பாலிசிக்கு வரிவிலக்கு தேவை பாலசுப்ரமணியன், தென்மண்டல இணைச் செயலாளர், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் : 'மெடிகிளெய்ம்' எனப்படும் தனிநபர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களுக்கு 18 சதவீத வரி ரத்து செய்ததை வரவேற்கிறோம். 'குரூப் பாலிசி' தனிநபர்களின் பெயரில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலிசிக்கான தொகையை ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து தான் நிறுவனங்கள் பிடித்தம் செய்கின்றனர். எனவே பாரபட்சம் காட்டாமல் குரூப் பாலிசிக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி கூடும் செல்வராஜ் , தென்மண்டல செயல்தலைவர், எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் சங்கம்: பாலிசிதாரர்களிடம் 18 சதவீத வரியை விளக்கி பாலிசி எடுப்பது சவாலாக இருந்தது. பாலிசிதாரர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. சில ஏஜன்ட்கள் வாடிக்கையாளரை தக்க வைக்க தங்களது கமிஷன் தொகையில் இருந்து வரி கட்டியுள்ளனர். மத்திய அரசின் வரிநீக்க அறிவிப்பின் மூலம் மீண்டும் ஆயுள் காப்பீடு செய்ய நினைப்போர் முன்வந்து பாலிசி எடுப்பர். இதன் மூலம் எல்.ஐ.சி.,யின் வளர்ச்சி அதிகரிப்பதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும். இவ்வாறு கூறினர்.