ADDED : நவ 12, 2024 05:17 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழுக் கூட்டம் தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது.
செயலாளர் வாசுதேவன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயசித்ரா, அருள்தாஸ் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் சங்கர், பாண்டி உமாதேவி, சிவகுமார், தனபாக்கியம் செயற்குழு தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாவட்ட செயலாளர் சீனிவாசன் தீர்மானங்களை விளக்கி பேசினார். மாநில பொதுச் செயலாளர் மயில் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், நவ.,29ல் டில்லியில் நடக்கும் தர்ணாவில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும். ஆசிரியர்களுக்கு சம்பளமில்லா விடுப்பு தவிர பிற விடுப்புகளுக்கு குறைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு நாட்களை மீண்டும் கணக்கிட்டு வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களில் தேர்வு நிலை பெற்று தர ஊதியம் ரூ. 4300ல் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு படி ரூ.500 ஐ தணிக்கை தடை என்ற பேரில் நிறுத்தி வைக்காமல் வழங்க வேண்டும். ஆசிரியர்களை பி.இ.ஓ.,க்கள் அலுவலகப் பணிகளுக்கு பயன்படுத்த கூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் எமிமாள் ஞான செல்வி நன்றி கூறினார்.

