ADDED : ஜூலை 24, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ராவிடம் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனு: மாநகராட்சி பள்ளிகளில் கல்வியாண்டு நடுவே ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால் கல்வித்துறையில் உள்ள நடைமுறை போல் அந்த கல்வியாண்டு இறுதி வேலை நாள் வரை மறுநியமன உத்தரவை மாநகராட்சி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் உறுதியளித்தார்.
நிர்வாகிகள் பாஸ்கர், சந்திரன், சரவணன், உக்கிரபாண்டி, கார்த்திகேயன், ராஜசேகர், சீனிவாசன், ஜோசப் ஜெயசீலன், ரங்கராஜன், சுப்பிரமணியகுமார் பங்கேற்றனர்.