ADDED : நவ 15, 2026 08:20 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வு இன்று (நவ.,15) நடந்தது.
காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை 11 மையங்களில் நடந்தது. ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த மாணவர்களுக்கான இத்தேர்வில் 3301 மாணவர்கள் எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அரசு மீனாட்சி மகளிர் கல்லுாரி, யாதவர் ஆண்கள் கல்லுாரி ஆகியவற்றில் 11 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் 1951 மாணவர்கள் தேர்வு எழுதினர். 1350 பேர் ஆப்சென்ட் (41 சதவீதம்) ஆகி இருந்தனர்.
