
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஜெயலட்சுமி, விஜயலட்சுமி, வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 64 ஆண்டுகளுக்கு பின்பு நடந்தது.
நேற்று (ஆக.28) காலை நான்காம் காலயாக பூஜைகள் நடந்தன. பின்பு கடம் புறப்பாடாகி காலை 9:00 மணியளவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் கோபாலன், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் ராஜா, சோழவந்தான் பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், தி.மு.க., நகர் செயலாளர் சத்யபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர். நிர்வாக அலுவலர் இளமதி, தக்கார் சங்கரேஸ்வரி கோயில் பணியாளர்கள், கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்தனர்.