/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.176 கோடியில் வைகை வடகரை ரோடுக்கு டெண்டர்
/
ரூ.176 கோடியில் வைகை வடகரை ரோடுக்கு டெண்டர்
ADDED : பிப் 20, 2024 06:31 AM
மதுரை: மதுரை வைகை வடகரை பகுதியில் திண்டுக்கல் ரோடுக்கு இணையாக 8 கி.மீ., ரோடு அமைக்க விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது.
நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில்வைகை கரையோர ரோடுகள் மிகவும் உபயோகமாக உள்ளன.
அரவிந்த் மருத்துவமனை முதல் அண்ணாநகர் வரையான வைகை கரையில் ஒரு கி.மீ.,க்கு இதுவரை ரோடு அமைக்கப்படவில்லை. அதேபோல தென் பகுதியில் ராஜாமில் ரோடு முதல் புட்டுத்தோப்பு வரையான 400 மீட்டர் தொலைவுக்கும் அமைக்கப்படவில்லை.
தவிர திண்டுக்கல் ரோடு பாலத்தை அடுத்து செங்கோல் நகர் பகுதியில் இருந்து சமயநல்லுார் வரையான பகுதியிலும் 8 கி.மீ., ரோடு அமைக்க திருத்திய மதிப்பீடு ரூ.176 கோடிக்கு அரசுக்கு நெடுஞ்சாலைத்துறை கருத்துரு அனுப்பியுள்ளனர்.
தேர்தல் அறிவிப்புக்கு முன் அறிவிப்பு வெளியாகி டெண்டர் விடப்பட வாய்ப்பு உள்ளது. இந்த ரோடு வைகையின் வடகரையில், மற்ற ரோடுகளைப் போலவே இருவழிப் பாதையாக அமையும்.

