/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சேவற்கொடி ஏற்ற வேண்டும்; பாரத ஹிந்து எழுச்சி முன்னணி மனு
/
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சேவற்கொடி ஏற்ற வேண்டும்; பாரத ஹிந்து எழுச்சி முன்னணி மனு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சேவற்கொடி ஏற்ற வேண்டும்; பாரத ஹிந்து எழுச்சி முன்னணி மனு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சேவற்கொடி ஏற்ற வேண்டும்; பாரத ஹிந்து எழுச்சி முன்னணி மனு
ADDED : டிச 12, 2025 07:29 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாண் அருகே உள்ள கல்லத்தி மரத்தில் சேவற் கொடி ஏற்ற வேண்டும் என கோயில் கண்காணிப்பாளர் ரஞ்சனியிடம், பாரத ஹிந்து எழுச்சி முன்னணியினர் மனு கொடுத்தனர்.
மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலையில் கோயில் சார்பில் முருகன் கொடியான சேவற் கொடியை ஏற்றி பக்தர்கள் வழிபட வழி செய்ய வேண்டும். மலையையும் கோயிலையும் பாதுகாக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
தலைவர் பாண்டியன்ஜீ கூறியதாவது:
கோயில் மலை பறிபோய்க் கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் 14 புனித தீர்த்த கிணறுகள் இருந்தது. ஏராளமான தீர்த்த கிணறுகளை காணவில்லை. மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பது முருக பக்தர்களின் எதிர்பார்ப்பு. நீதிமன்ற தீர்ப்பையும் அறநிலைத்துறை மதிக்கவில்லை. பக்தர்களின் உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கிறது. மலை உச்சியில் உள்ள கல்லத்தி மரத்தில் சேவற் கொடி ஏற்ற வேண்டும். இந்த மலை முருகப்பெருமானின் சொத்து. இச்சொத்தை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அறநிலையத்துறை பறிகொடுத்துக் கொண்டே இருக்கிறது.
கையெழுத்து இயக்கம் திருப்பரங்குன்றம் மாலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி ஹார்விபட்டி ஆன்மிக இறையன்பர்கள் குழு, மக்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
பின் கலெக்டரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் கரத்தில் உள்ள தங்கவேல், புரட்டாசியில் மலை மீது காசி விஸ்வநாதர் கோயில் கொண்டு செல்லப்பட்டு அங்கு சுனை தீர்த்தத்தில் அபிஷேகம் நடக்கும். கார்த்திகையில் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது பன்னெடுங்கால பக்தர்களின் கோரிக்கை.
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வழங்கிய தீர்ப்பின்படி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்த்தோம். அவரவர் முறைப்படி கடவுளை வழிபட உரிமை உண்டு என்ற அடிப்படையில் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் விரைவில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

