தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சாலை பயன்பாடு பாகுபாட்டை தடுக்க வழக்கு

சாலை பயன்பாடு பாகுபாட்டை தடுக்க வழக்கு

சாலை பயன்பாடு பாகுபாட்டை தடுக்க வழக்கு


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் முத்துவிஜயபுரம் இருளாண்டி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கமுதி அருகே நகரத்தார்குறிச்சியில் ஆக.,29 ல் கோயில் திருவிழா நடந்தது. குறிப்பிட்ட பிரிவு மக்கள் வழிபடுவதற்காக பொது சாலை வழியாக சென்றனர். சிலர் வழிமறித்து கற்களை வீசி, ஜாதி அடிப்படையில் அவமதித்து இடையூறு செய்தனர். அபிராமம் போலீசில் புகார் அளித்தோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது சாலையில் எவ்வித சட்டவிரோத தடையையும் ஏற்படுத்தக்கூடாது. ஜாதி பாகுபாடின்றி குறிப்பிட்ட பிரிவு மக்கள் அச்சாலையை பயன்படுத்துவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு தமிழக உள்துறை செயலர், கலெக்டர், எஸ்.பி., அக்.,26 ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us