UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 05:45 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் அய்யப்பன் கோயிலில் சன்மார்க்க சங்கம் சார்பில் வள்ளலாரின் 204 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். மணிகண்டன் அருள் விளக்கேற்றினார். வள்ளலார் எனும் தலைப்பில் ராமலிங்கம் பேசினார். ஜோதி வழிபாடு நடந்தது. வள்ளலாரின் படம் அலங்கரிக்கப்பட்டு நான்கு ரத வீதிகளில் பவனி வந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகி சாந்தி நன்றி கூறினார்.
