/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி ஏ.இ.,க்களுக்கானபணி ஒதுக்கீட்டில் 'அரசியல்' 'பேஸ்மட்டம் வீக்' ஆகும் இன்ஜி., பிரிவு
/
மாநகராட்சி ஏ.இ.,க்களுக்கானபணி ஒதுக்கீட்டில் 'அரசியல்' 'பேஸ்மட்டம் வீக்' ஆகும் இன்ஜி., பிரிவு
மாநகராட்சி ஏ.இ.,க்களுக்கானபணி ஒதுக்கீட்டில் 'அரசியல்' 'பேஸ்மட்டம் வீக்' ஆகும் இன்ஜி., பிரிவு
மாநகராட்சி ஏ.இ.,க்களுக்கானபணி ஒதுக்கீட்டில் 'அரசியல்' 'பேஸ்மட்டம் வீக்' ஆகும் இன்ஜி., பிரிவு
ADDED : செப் 30, 2025 04:21 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் பொறியியல் பிரிவில் உதவி பொறியாளர் (ஏ.இ.,), இளநிலை பொறியாளர் (ஜே.இ.,) உள்ளிட்டோருக்கு வார்டு ஒதுக்கீட்டில் 'அரசியல்' செய்யப்படுவதால் பணிகளின் தரம் கேள்விக்குறியாகிறது என புகார் எழுந்துள்ளது.
மாநகராட்சி வார்டுகளில் நடக்கும் குடிநீர், பாதாளச் சாக்கடைகள் பராமரிப்பு, புதிய இணைப்பு வழங்குதல், கட்டடம், பாலங்கள், ரோடுகள் அமைத்தல், பராமரிப்பு பணிகள், மதிப்பீடு செய்தல், ஆக்கிரமிப்புகள் அகற்றம் என மக்களுக்கான முக்கிய பணிகளை பொறியியல் பிரிவு மேற்கொள்கிறது.
இப்பணிகளை 29 ரெகுலர் ஏ.இ.,க்கள், 6 ஜே.இ.,க்கள், தவிர பொறுப்பு ஏ.இ., ஜே.இ.,க்களாக தொழில்நுட்ப உதவியாளர், தேர்ச்சி திறன் நிலை 1, நிலை 2 என மொத்தம் 57 பேர் மேற்கொள்கின்றனர். இதில் அனுபவம் வாய்ந்த ரெகுலர் ஏ.இ.,க்கள் பலர் புறக்கணிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு பதில் பொறுப்பு ஏ.இ., ஜே.இ.,க்களான தொழில்நுட்ப உதவியாளர், தேர்ச்சி திறன் நிலை 2 பணியாளர்களுக்கு அதிக வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிருப்தி நிலவுகிறது. இதனால் பணிகளின் தரம் கேள்விக்குறியாவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பொறியாளர் சிலர் கூறியதாவது: பொறியியல் பிரிவில் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் அதை சிலர் கமிஷனர்சித்ரா கவனத்திற்கு கொண்டு செல்வதில்லை. குறிப்பாக அனுபவம் வாய்ந்த ரெகுலர் ஏ.இ.,க்களுக்கு ஒரு வார்டும், தேர்ச்சி திறன் நிலை 2 பணியாளர்களுக்கு 2 அல்லது 3 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு பணி ஒதுக்கீட்டில் நடக்கும் 'அரசியல்' வெளியே தெரிவதில்லை.
புதிதாக சேர்ந்த ஏ.இ.,க்களுக்கும் சரியான வழிகாட்டுதல் இல்லை. இதனால் குடிநீர், பாதாளச் சாக்கடை, ரோடு பணி பாதிக்கிறது.
வருவாய் பிரிவில் அனுபவம் இல்லாதவர்களை பில் கலெக்டர் உள்ளிட்ட பணிகளில் நியமித்ததால் தான் சொத்துவரி நிர்ணயத்தில் 'பாஸ்வேர்டு' திருட்டு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு, ரூ. பல கோடி முறைகேடு நடக்க காரணமாக இருந்தது.
பணி ஒதுக்கீட்டு அரசியலால் பல ஏ.இ.,க்கள் மனஉளைச்சலிலும் உள்ளனர்.
இதனால் இப்பிரிவை சிலர் 'பில்டிங் ஸ்ட்ராங்க்; பேஸ் மட்டம் வீக்' என விமர்சிக்கின்றனர். எனவே இப்பிரிவில் நடக்கும் 'அரசியலுக்கு' கமிஷனர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.