/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முன்னாள் ராணுவத்தினர் உரிமையை போராடித்தான் பெற வேண்டியுள்ளது மாநில நிர்வாகி வேதனை

ADDED : பிப் 12, 2024 05:09 AM

திருப்பரங்குன்றம்: ''தமிழகத்தில் ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் உரிமைகளை போராடித்தான் பெற வேண்டியுள்ளது'' என மாநில கொள்கை பரப்பு செயலாளர் வழிவிட்டான் பேசினார்.
மதுரை பசுமலையில் 'ஒருங்கிணைந்த தமிழக பட்டாள அமைப்பின்' முதல் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். மகளிர் அணி தலைவர் குழந்தை தெரசா முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் வீராச்சாமி வரவேற்றார். ஓராண்டு செயல்பாடுகள் குறித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் இளங்கோ விவரித்தார்.
கொள்கை பரப்புச் செயலாளர் பேசியதாவது: ராணுவத்தில் பணியாற்றுவோருக்கும், ஓய்வு பெற்றோருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் தமிழகத்தில் மரியாதை கிடைப்பதில்லை. அவர்களுக்கான உரிமைகள் கிடைக்காததால், எந்த அரசு வந்தாலும் உரிமைகளை பெற போராட வேண்டியுள்ளது. வட மாநிலங்களில் வீரர்கள் இறந்தால் முதல்வர், அமைச்சர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.
நாட்டுக்காக உயிர் துறக்கும் வீரரின் மனைவிக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும். கோயில் அறங்காவலர் குழுக்களில் முன்னாள் ராணுவத்தினர் நியமிக்கப்பட வேண்டும். வீட்டு வரியில் விலக்கு, இலவச மருத்துவ சேவை, வீட்டு மனை பட்டா, டோல்கேட் கட்டண விலக்கு வழங்க வேண்டும், என்றார். மாவட்ட தலைவர் சுலைமான் நன்றி கூறினார்.