sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 குவியுது...அவியுது... கருகுது...: அறுவடையான நெல்மணிகள் அழுது புலம்பும் விவசாயிகள்

/

 குவியுது...அவியுது... கருகுது...: அறுவடையான நெல்மணிகள் அழுது புலம்பும் விவசாயிகள்

 குவியுது...அவியுது... கருகுது...: அறுவடையான நெல்மணிகள் அழுது புலம்பும் விவசாயிகள்

 குவியுது...அவியுது... கருகுது...: அறுவடையான நெல்மணிகள் அழுது புலம்பும் விவசாயிகள்


ADDED : மார் 02, 2026 06:46 AM

Google News

ADDED : மார் 02, 2026 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் அருகே சி.புதுாரில் நெல்கொள்முதல் மையத்தை விரைந்து அமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

சுற்று வட்டார பகுதிகளில் மேலுார் கால்வாய் ஒருபோக பாசனத்தில் 1200 ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. பணிகள் முடிந்து அறுவடை செய்யப்பட்ட நெல், சமுதாயக்கூடம் அருகே களத்தில் குவிக்கப்பட்டு மழை, வெயிலில் காய்ந்து வருகிறது.

விவசாயிகள் பாலமுருகன், முருகேசன்: இங்கு நெல் அறுவடை செய்யப்பட்டு 20 நாட்களுக்கும் மேலாகிறது. களத்தில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் திறந்தவெளியில் நெல் குவித்து வைக்கப் பட்டுள்ளது. தற்போது அறுவடையான 70 ஏக்கர் நிலங்களில் 4 ஆயிரம் மூடை அளவிலான நெல் தேங்கியுள்ளது. மேலும் மீதமுள்ள பல ஏக்கர் நிலங்களில் இருந்து 20 ஆயிரம் மூடைகளுக்கும் மேலான நெல் வரவேண்டியுள்ளது.

இங்கு இடம் இல்லாததால் அறுவடை பணிகள் தாமதமாகின்றன. ஏற்கனவே குவிக்கப்பட்டுள்ள நெல் மழை, வெயிலில் காய்ந்து வருகின்றன. இதனால் அவிந்து முளைவிடும் அபாயத்தில் உள்ளன. இரவில் நெல்லை காவல் காக்க வேண்டியுள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து கொள்முதல் மையத்தை அமைக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us