ADDED : செப் 12, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த ஆவணி மூலத் திருவிழாவில் கலந்து கொள்ள செப். 1 அன்று, திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் இருந்து மாணிக்கவாசகர் புறப்பட்டார்.
அங்கு நரியை பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நேற்று மாணிக்கவாசகர் கோயிலை வந்தடைந்தார். ஏற்பாடுகளை இணை, உதவி ஆணையர்கள் கிருஷ்ணன், லோகநாதன், பேஷ்கார் ஜெயபிரகாஷ் செய்திருந்தனர்.