/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'அனைத்து சமூகத்திற்கும் பொதுவானவர் அமைச்சர்' ; அமைச்சர் மூர்த்தி பேட்டி
/
'அனைத்து சமூகத்திற்கும் பொதுவானவர் அமைச்சர்' ; அமைச்சர் மூர்த்தி பேட்டி
'அனைத்து சமூகத்திற்கும் பொதுவானவர் அமைச்சர்' ; அமைச்சர் மூர்த்தி பேட்டி
'அனைத்து சமூகத்திற்கும் பொதுவானவர் அமைச்சர்' ; அமைச்சர் மூர்த்தி பேட்டி
ADDED : ஜன 03, 2025 07:01 AM
அவனியாபுரம்; ''அமைச்சர் என்பவர் அனைத்து சமூகத்திற்கும் பொதுவானவர்'' என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்த கால் நடும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அரசு சார்பில் நடைபெறும். ஜல்லிக்கட்டில் பரிசளிப்பதில் முறைகேடு இல்லை. அனைத்தும் கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் எந்த குறையும், பாகுபாடும் இருக்காது.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மாடுபிடி வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் போட்டிகளில் பங்கேற்க வழக்கம் போல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதில் வரும் எண்ணிக்கையை பொறுத்து காளைகள் அவிழ்க்கப்படும். இதில் வழக்கமான நடைமுறை பின்பற்றப்படும்.
சமூக வலைதளங்களில் நான் பேசியதாக பரப்பப்பட்டு வரும் குறிப்பிட்ட வீடியோ உள்நோக்கம் கொண்டது. அதில் குறிப்பிட்ட சமூகத்தார், அனைத்து சமூகத்தாரோடும் நல்லிணக்கத்துடன் உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனும் பொருள்பட தான் பேசியுள்ளேன். டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அக்குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று பணியில் சேரக்கூடிய நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தேன். அந்த மாணவர்கள் பிற சமூகத்தாரோடு எப்படி நல்லிணக்கத்துடன் பணிபுரிய வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கி உள்ளேன். எனது பேச்சு முழுவதையும் வெளியிடாமல் ஒரு பகுதியை மட்டும் வெட்டி பரப்புகின்றனர்.
அமைச்சர் என்பவர் அனைத்து சமூகத்திற்கும் பொதுவானவர். இங்கு ஒரு சார்பு நிலையுடன் யாரோடும் இயங்க முடியாது என்றார்.

