ADDED : மே 28, 2025 12:28 AM
மதுரை : தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில், மதுரையில் 2 நாட்களாக வானம் மப்பும், மந்தாரமுமாக மாறி சாரல் பெய்கிறது. சில நாட்களாக கொளுத்திய அக்னி வெயில் முடிவுக்கு வந்தது. காலை முதல் வெயில் முகம் காணாமல் மதுரை சிலிர்ப்புடன் காட்சியளித்தது.
அவ்வப்போது பெய்த சாரல் மழையளவு (மி.மீ.,) விவரம்: மதுரை வடக்கு 5.6, தல்லாகுளம் 4, பெரியபட்டி 3.2, விரகனுார் 2.4, சிட்டம்பட்டி 4.6, கள்ளந்திரி 4.6, இடையபட்டி 1, சாத்தையாறு அணை 2.4, ஆண்டிப்பட்டி 2.6, விமான நிலையம் 7.2, பேரையூர் 5.6, கள்ளிக்குடி 8.6.
அணையில் நீர்மட்டம்
பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.1 அடி. (மொத்த உயரம் 152 அடி). அணையின் நீர் இருப்பு 2285 மில்லியன் கனஅடி. அணைக்கு வினாடிக்கு 5205 கனஅடி தண்ணீர் வருகிறது.
அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.வைகை அணையின் நீர்மட்டம் 52.99 அடி. (மொத்த உயரம் 71 அடி). அணையில் 2409 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 426 கனஅடி தண்ணீர் வருகிறது.
அணையில் இருந்து வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. சாத்தையாறு அணையின் நீர்மட்டம் 19.5 அடி. (மொத்த உயரம் 29 அடி). அணையின் நீர் இருப்பு 25.7 மில்லியன் கனஅடி. அணைக்கு நீர் வரத்தும், வெளியேற்றமும் இல்லை.