தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தொழுவமாக மாறியது பணியாளர் குடியிருப்பு

 தொழுவமாக மாறியது பணியாளர் குடியிருப்பு

 தொழுவமாக மாறியது பணியாளர் குடியிருப்பு


ADDED : ஜன 20, 2026 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 07:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் ஒன்றிய அலுவலர் குடியிருப்புகளில் மாடுகளை கட்டி வைப்பதால், ஒன்றிய பணியாளர் குடி யிருப்பு மாட்டுத் தொழுவ மாக மாறிப்போனது.

உசிலம்பட்டியில் ஒன்றிய அலுவலகம் 1958ல் துவக்கப்பட்டது. அந்தக் காலத்தில் அலுவலகத்தில் பணிபுரியும் ஒன்றிய கமிஷனர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அதே ஊரில் தங்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றிய அலுவலர்களுக்கான குடியிருப்பில் 10 வீடுகள் உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரில் கட்டப்பட்டு உள்ளது.

கடந்த 2010 வரையில் இந்த வீடுகளை அலு வலர்கள் பயன்படுத்தினர். அடுத்தடுத்து வந்த அலுவலர்கள் தங்காததால், வீடுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டன. சில வீடுகள் மட்டும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தது. யாரும் பயன்படுத்தாமல் போனதால் ஒரு சில வீடுகள் இருந்த பகுதியில் ஒருங்கிணைந்த வாழ்வாதார இயக்க அலுவலகம் கட்டப்பட்டது.

மீதியுள்ள 6 வீடுகள் பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கின்றன. பூட்டிய வீடுகளின் முன்பகுதியில் மாடுகளைக் கட்டி வளர்த்து ஆக்கிரமிக்கின்றனர். மாடுகளுக்குத் தீவனம் வைக்கவும், வீடுகளுக்கான குடிநீர் இணைப்பை பயன் படுத்துகின்றனர். சில வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு சேதமடைந்து குடிநீர் வெளியேறியபடி உள்ளது. ஒன்றிய நிர்வாகத்தினர் இந்த வீடுகளை பராமரிப்பு பணி செய்து, பயன்படுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us