/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் அக்.12 ல் பா.ஜ., பிரசார யாத்திரை துவக்கவிழா; கேட்ட இடம் கிடைக்கவில்லை; கிடைத்ததில் விருப்பமில்லை

ADDED : அக் 08, 2025 12:18 AM
மதுரை:மதுரையில் பா.ஜ., தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்கும் தேர்தல் பிரசார யாத்திரை துவக்க விழாவிற்கு அக்கட்சியினர் கேட்ட 5 இடங்களை ஒதுக்காமல், வேறு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து 2026ல் நடக்க உள்ள தேர்தலை சந்திக்க உள்ளது. அ.தி.மு.க., பிரசாரத்தை துவக்கியது போல, பா.ஜ.,வும் விரைவில் மாநில அளவில் தொகுதி வாரியாக யாத்திரை நடத்த மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்பாடு செய்து வருகிறார்.
இதனை அக். 12 மாலை 4:00 மணிக்கு மதுரையில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவைக் கொண்டு துவக்கி வைக்கவும் முடிவு செய்துள்ளார்.
இதன்பின் சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை வடக்கு, மத்திய சென்னை, பெரம்பலுார் என தொகுதி வாரியாக யாத்திரை, பொதுக் கூட்டம் நடத்த உள்ளனர்.
மதுரை துவக்க விழாவை நடத்துவது தொடர்பாக அனுமதி பெற நகர தலைவர் மாரிசக்ரவர்த்தி தலைமையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விண்ணப்பத்தில் பழங்காநத்தம் ரவுண்டானா, மேலமாசி வீதியில் டி.எம்.கோர்ட், முனிச்சாலை சந்திப்பு, சிம்மக்கல் ஆறுமுச்சந்தி, கே.புதுார் பஸ்ஸ்டாண்ட் பகுதிகளை கேட்டனர். இதை பரிசீலித்த போலீஸ் அதிகாரிகள் அண்ணாநகர் பகுதியில் அம்பிகா தியேட்டர் அருகில் உள்ள இடத்தை ஒதுக்கியுள்ளனர். இந்த இடம் ஒதுக்குப்புறமாக இருப்பதாக பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.
தீபாவளி நேரம் என்பதால் பா.ஜ.,வினர் கேட்ட இடங்களில் அதிக நெரிசலுக்கு வாய்ப்புள்ளது என்பதால் அண்ணாநகரை ஒதுக்கியதாகவும், பிரசாரத்தில் பங்கேற்க வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். கர்ப்பிணிகள் பங்கேற்க கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை போலீசார் விதித்ததாக' கட்சியினர் கூறினர்.