/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கண்மாயை எட்டி பார்க்காத தண்ணீர் கண்டு கொள்ளாத நீர்வளத் துறையினர்
/
கண்மாயை எட்டி பார்க்காத தண்ணீர் கண்டு கொள்ளாத நீர்வளத் துறையினர்
கண்மாயை எட்டி பார்க்காத தண்ணீர் கண்டு கொள்ளாத நீர்வளத் துறையினர்
கண்மாயை எட்டி பார்க்காத தண்ணீர் கண்டு கொள்ளாத நீர்வளத் துறையினர்
ADDED : செப் 30, 2024 05:02 AM

மேலுார்: மேலுாரில் பெரியாறு பிரதான கால்வாய் அருகே உள்ள மூங்கில் கண்மாய்க்கு இதுவரை தண்ணீர் திறக்காததால் நீர்வளத்துறையினர் மீது விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
புலிப்பட்டி - குறிச்சிபட்டி வரை பெரியாறு வைகை ஒரு போக பாசன பகுதிக்கு 12 வது பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது. இதில் மேலுார் நுழைவாயிலில் பிரதான கால்வாய் அருகே 16, 18 வது கால்வாய்கள் வழியாக மூங்கில் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும்.
இக் கண்மாய் நிரம்பினால் குளஞ்சான் கண்மாய் முதல் சேனிகண்மாய் வரை 10 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி 700 ஏக்கர் பாசனம் பெறும். ஆனால் மூங்கில் கண்மாய்க்கு இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை.
விவசாயி முத்துகிருஷ்ணன் கூறியதாவது : தண்ணீர் திறந்து 14 நாட்களாகியும் கண்மாய்க்கு தண்ணீர் வந்து சேரவில்லை. அதனால் நாற்று பாவிய விவசாயிகள் நடமுடியாமல் தவிக்கின்றனர். தண்ணீர் வராததால் நாற்றுகள் முற்ற ஆரம்பித்துள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் பதிலளிக்கின்றனர்.
தனிநபர்கள் சிலர் கால்வாயை ஆக்கிரமித்துள்ளனர். நீர்வளத்துறை அலுவலகம் அருகே உள்ள மூங்கில் கண்மாயை கூட அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இன்னும் 31 நாட்கள் மட்டுமே முழுமையாக தண்ணீர் திறக்கும் நிலையில் தண்ணீர் வராதது வேதனையே. நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக வேண்டும் என்றார்.
செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், ''உடனே கால்வாயை சுத்தம் செய்து தண்ணீர் தர ஏற்பாடு செய்யப்படும் என்றார்.