/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அவனியாபுரம் ரோட்டை விரிவாக்கம் செய்வது எப்போது புதிதாய் கிளம்பும் ஆக்கிரமிப்புகளால் புலம்பும் நிலை வரலாம்

ADDED : ஜன 02, 2024 05:59 AM
மதுரை: மதுரை நகரை அணுகும் நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி விரிவாக்கம் செய்து வருவதைப் போல, அவனியாபுரம் ரோட்டில் எப்போது பணிகள் துவங்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அகலப்படுத்தப்பட்டு வருகின்றன.
மதுரை - திண்டுக்கல் ரோடு ஏற்கனவே விரிவுபடுத்தப்பட்டது. சிலமாதங்களுக்கு முன் ஒத்தக்கடை ரோடு அகலப்படுத்தப்பட்டு விட்டது.
இதையடுத்து திருநகர் ரோட்டை ரூ.40 கோடி செலவில் அகலப்படுத்தும் பணிகள் துவங்கிவிட்டன.
பாக்கி இருப்பது அவனியாபுரம் வழியாக விமான நிலையம் செல்லும் ரோடுதான். தெற்குவாசலில் துவங்கும் இந்த ரோடு ரிங்ரோடு மண்டேலா நகர் வரை 8.6 கி.மீ., தொலைவுக்கு உள்ளது. இதில் பாலத்தில் இருந்து வில்லாபுரம் தாண்டி அவனியாபுரம் பிரிவு வரை ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. அதன்பின் துவங்கும் பைபாஸ் ரோட்டிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன.
இதில் உணவகங்கள், ஒர்க் ஷாப்கள், கடைகள் என பலவும் உள்ளன. சமீப நாட்களாக கூடுதலாக தள்ளுவண்டி கடைகள், உணவகங்கள் முளைத்துள்ளன. இரவில் வண்ண விளக்குகள் ஜொலிக்க வியாபாரம் நடக்கிறது. விமான நிலையம், அருப்புக்கோட்டை, துாத்துக்குடி செல்லும் முக்கிய ரோடு என்பதால் கனரக வாகனங்கள் உட்பட போக்குவரத்து அதிகம் உள்ளது.
மற்ற ரோடுகளை அகலப்படுத்தியது போல, இங்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் இந்த ரோடும், பழங்காநத்தம் - திண்டுக்கல் பைபாஸ் ரோடு போல 'பிக்னிக் ஸ்பாட்' ஆக மாறி பொது மக்களை புலம்ப வைத்துவிடும்.