/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிறுத்தம் இருக்கு நிழற்கூடம் இல்லை
/
நிறுத்தம் இருக்கு நிழற்கூடம் இல்லை
ADDED : ஜூலை 28, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்,: பேரையூர் தாலுகா அலுவலகம் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் நிழற்கூடம் இல்லாமல் மக்கள் அவதிப் படுகின்றனர்.
இங்கு வத்ராப், எஸ். மேலப்பட்டி, விருதுநகர் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து பஸ்களும் நின்று செல்லும். ஆனால் நிழற்கூடம் இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். வெயிலிலும், மழையிலும் கால் கடுக்க நின்று பஸ் ஏற வேண்டிய அவலம் உள்ளது. மாணவர்கள், தாலுகா அலுவலகத்திற்கு வருவோர், வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பஸ் நிறுத்தத்தில் நிழற் கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

