/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அறிவியல் மையம் இருக்கு… ஆனா இல்ல; l மூன்றாண்டுகளை கடந்தும் மூடியிருக்கும் அவலம்

ADDED : அக் 09, 2024 04:24 AM

ரூ.5 கோடி மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டும் திறக்கப்படவில்லை என்று தொடர் செய்தி வெளியான நிலையில் இந்தாண்டு பிப். 18 ம் தேதி அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஆறு மாதங்களாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் தடகள, குழு விளையாட்டுக்கான உடல் திறனை கண்டறிவதற்கான கருவி, இ.சி.ஜி. கருவி, பிசியோதெரபி செயல்பாட்டுக்கான கருவி, ரேடியோலஜி கருவிகள் இங்கு வைக்கப்பட்டன. அனைத்து கருவிகளும் கம்ப்யூட்டர் முறையில் துல்லியமாக இயக்கக்கூடியவை. எனவே அதற்குரிய கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் தேவை. டாக்டர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், டெக்னீசியன்கள் நியமனம்இதுவரை செய்யப்படவில்லை. கருவிகளை தொடர்ந்து செயல்படுத்தினால் தான் பராமரிக்க முடியும். இயக்காமலேயே தற்போது கருவிகள் சேதமாகிறது.
பெரும்பாலான அறைகளுக்கு ஏசி வசதி செய்தும், பயன்படுத்தாமல், பராமரிக்காமல் உள்ளதால் ஏசியில் நீர்க்கசிவு ஏற்பட்டு முதல்தளத்தின் மரச்சட்டங்கள் சேதமடைந்துள்ளன.
தற்போதைக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வசதி கேட்கப்பட்டுள்ளது. மற்ற எந்த பணிகளுமே நடக்கவில்லை. கோடிக்கணக்கில் கட்டுமானம் முடிந்து ரூ.பல கோடி கருவிகள் வாங்கி விட்டு அதற்குரிய பணியாளர்கள் நியமனம் செய்வதில் மட்டும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் இருந்தும் வீரர், வீராங்கனைகளுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.
தாமதம் செய்வது தொடர்ந்தால் அனைத்து கருவிகளுமே பாழாகிவிடும் என்பதால் தாமதமின்றி ஆட்களை நியமிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன்வர வேண்டும்.