/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவு வலி நீங்க வழி இருக்கு: புற்றுநோய் அல்லாத பிற வலிகளுக்கு தீர்வு

ADDED : அக் 31, 2025 01:53 AM

மதுரை:  மதுரை அரசு மருத்துவமனையில் மயக்கவியல் துறையின் கீழ் உள்ள வலி நீக்கியல் சிகிச்சை பிரிவில் புற்றுநோய் அல்லாத முதுகுவலி, மூட்டு வலி என நீண்ட நாள் பாதிப்பில் உள்ளவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை பெறும் வசதி உள்ளது. இந்த வார்டில் சிகிச்சை பெறுபவர்களில் 90 சதவீதம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான். புற்றுநோய் அல்லாத பிறவகை வலியால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு இந்த சிகிச்சை குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது என்கிறார் துறைத்தலைவர் டாக்டர் கல்யாணசுந்தரம்.
அவர் கூறியதாவது: மதுரை அரசு மருத்துவமனை 8வது வார்டில் தினமும் 30 பேர் வரை புறநோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் புற்றுநோயாளிகள் தான். பிற வகை வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த சிகிச்சை குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. மூட்டு வலி, முதுகுவலியால் அவதிப்படுபவர்களில் 70 சதவீதம் பேருக்கு முறையான ஓய்வுடன் வாழ்க்கை முறையை மாற்றினால் வலியில் இருந்து விடுபடலாம். 5 சதவீதம் பேருக்கு அறுவை சிகிச்சை செய்வது கட்டாயம். மீதியுள்ளோருக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் வலி நீக்கியல் சிகிச்சை அளிப்பது சரியான தேர்வு.  ரேடியோ அதிர்வெண் சிகிச்சை, ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை பிரித்து மீண்டும் செலுத்தும் பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா (பி.ஆர்.பி.,) சிகிச்சைகளின் மூலம் நாள்பட்ட வலியில் இருந்து குணமடையலாம்.
நீண்டநாள் வலி என்றதும் மூடநீக்கியல் துறைக்கு செல்வதற்கு முன்பாக வலி நீக்கியல் துறை நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம். இதன் மூலம் அறுவை சிகிச்சை தேவையா என்பதை முடிவெடுக்கலாம். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் மட்டுமே வலிநீக்கியல் வார்டு தனியாக உள்ளது. காலை 10:00 மணி முதல் மதியம் ௧:00 மணி வரை புறநோயாளியாக ஆலோசனை பெறலாம் என்றார்.