ADDED : அக் 31, 2025 01:53 AM
மதுரை:  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியையொட்டி பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருநகரில் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த இல்லத்தில் அவரது படத்திற்கு காங்., சார்பில் மாணிக்கம் தாகூர் எம்.பி.,  தலைமையில் கவுன்சிலர் சுவேதா,  சட்டத்துறை பொதுச் செயலாளர் சத்யன் மாலை அணிவித்தனர்.  அ.தி.மு.க., சார்பில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமையில் இளைஞரணி மாவட்ட   செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் செல்வகுமார்,  பாலமுருகன்,  பாலா,  மகாராஜன், ஜெயக்குமார் மாலை அணிவித்தனர்.
தி.மு.க., சார்பில்  வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலாஜி, கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, சிவா. இளைஞர் அணி தெற்கு மாவட்ட  அமைப்பாளர் விமல் தலைமையில் நிர்வாகிகள் சுரேஷ்,  ஜெகதீஷ், வெற்றி, கண்ணன் மாலை அணிவித்தனர். எஸ்.ஆர்.வி.,  மக்கள் நல மன்றம் சார்பில் தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் அண்ணாமலை, காளிதாசன், வேட்டையார்,  அரவிந்தன்,  பாஸ்கரபாண்டி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ரவிச்சந்திரன் மாலை அணிவித்தனர்.
* அலங்காநல்லுார், கீழச்சின்னனம்பட்டி, தேவசேரி, சத்திர வெள்ளாளப்பட்டி, பாலமேடு, கல்லணை, வாடிப்பட்டி, சமயநல்லுார்   பகுதிகளில் தேவர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர். பா.ஜ.,வடக்கு, தெற்கு ஒன்றிய நிர்வாகிகள், தொகுதி அமைப்பாளர் பழனிசாமி தலைமை வகித்தார். துணை தலைவர் கோவிந்த மூர்த்தி, ஒன்றிய தலைவர்கள் இருளப்பன், முனீஸ்வரி, கார்த்திக், பாலமுருகன் முன்னிலை வைத்தனர்.
*  உசிலம்பட்டியில் தேவர் சிலை வளாகத்தில் 3 நாட்கள் திருவிழா நடந்தது. பாரதிய பா.பி., தலைவர் முருகன்ஜி தலைமையில் சிறிய அளவிலான 118 தேவர் சிலைகளுடன் வழிபாடு செய்தனர். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிறுவர்கள் தேவர், வேலுநாச்சியார் வேடமணிந்தும், பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்தும் வழிபாடு நடத்தினர்.
* சோழவந்தானில்  தி.மு.க., ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை வகித்தார். நகர் செயலாளர் சத்யபிரகாஷ், சேர்மன் ஜெயராமன், துணைச் செயலாளர் ஸ்டாலின் பங்கேற்றனர். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில்   நிர்வாகிகள் முருகேசன், ராமச்சந்திரன், கண்ணன், சரத் மரியாதை செலுத்தினர்.
பா.பி., சார்பில் தேசிய இளைஞர் அணி செயலாளர் அசோக் தலைமை வகித்தார். தே.மு.தி.க., சார்பில் ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், நாகராஜ் தலைமையில் நிர்வாகிகள் குருநாதன், கருப்பையா மாலை அணிவித்தனர். சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை சார்பில் நிர்வாகிகள் நாகு, ரஞ்சித் தலைமையில் மரியாதை செலுத்தினர். அ.ம.மு.க., சார்பில் ஒன்றிய துணைச் செயலாளர் மீனாட்சிசுந்தரம், நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், திரவியம், குமரன் மரியாதை செலுத்தினர்.  நா.த.க., சார்பில் தலைவர் முக்தீஸ்வரன் தலைமையில் மரியாதை செலுத்தினர்.
* வாடிப்பட்டி: மேட்டு நீரேத்தானில் தேவர் சிலை முன்பாக கணபதி ஹோமம், யாகசாலை பூஜை், வேத மந்திரங்களுடன் சிறப்பு பூஜை நடந்தது. பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்தனர். பால், சந்தனம் உட்பட 16 வகை அபிஷேகம்,  பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. மறவர் சங்கம், எம்.என்.,வெள்ளையன் சீடர்கள், கிராமமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

