ADDED : செப் 24, 2024 05:08 AM
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே கொண்டையம்பட்டி பெரியாறு பாசன கால்வாயில் பராமரிப்பின்றி பழுதடைந்த பழமையான பாலம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
கொண்டையம்பட்டியில் இருந்து அரசு பள்ளி மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு தினமும் ஏராளமானோர் மற்றும் தனியார் பள்ளி உள்ளிட்ட வாகனங்கள் இப்பாலத்தை கடந்து செல்கின்றன. இந்த பாலத்தின் இருபக்க தடுப்புகள் சேதமடைந்தும், அடிப்பகுதி பூச்சுகள் பெயர்ந்து கால்வாய்க்குள் விழுந்துள்ளன.
மிகப் பழமையான பாலத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என கிராமத்தினர் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என தொடர் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. இப்பாலம் கட்டிய அதே ஆண்டில் கட்டிய அழகாபுரி காலனி பாலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடிந்தது. எனவே புதிய பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

