/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தியாகராஜர் பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் நிதி
/
தியாகராஜர் பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் நிதி
தியாகராஜர் பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் நிதி
தியாகராஜர் பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் நிதி
ADDED : பிப் 14, 2024 04:38 AM

திருப்பரங்குன்றம் : மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியின் இந்நாள் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக முன்னாள் மாணவர்கள் ரூ.44 லட்சம் நிதி வழங்கினர்.
இங்கு 1992- -96ல் படித்த மாணவர்கள் அசோக், செந்தில், சிவக்குமார், பாலமுகன், பரமசிவம் ஆகியோர் கல்லுாரித் தலைவர் ஹரி தியாகராஜனிடம் வழங்கினர். முதல்வர் பழனிநாத தராஜா, முன்னாள் மாணவர்கள் சங்க தொடர்புத் துறை அலுவலர் கார்த்திகேயன் உடனிருந்தனர்.
ஹரிதியாகராஜன் கூறியதாவது: முன்னாள் மாணவர்கள் வழங்கிய நிதி வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு, வட்டித் தொகையை கொண்டு கல்லுாரி நிறுவனர் நாளில் பிளஸ் 2 ல் அதிக மதிப்பெண், பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஒழுக்கம், வருகைப் பதிவு, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. கல்லுாரிக்கு எப்.சி.ஆர்.ஏ., அனுமதி கிடைத்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவர்களும் உதவ வசதியாக இருக்கும் என்றார்.

