/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி வினா போட்டி
/
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி வினா போட்டி
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி வினா போட்டி
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி வினா போட்டி
ADDED : டிச 18, 2024 06:21 AM
மதுரை : தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி வினா போட்டிகள் டிச.21லும், இறுதிப் போட்டி டிச.28ல் விருதுநகரிலும் நடக்கிறது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெள்ளிவிழா ஆண்டாக அரசு கடைபிடிக்கிறது. இதையொட்டி இப்போட்டிகள் நடக்க உள்ளன.
திருக்குறளில் இருந்து சமயசார்பற்ற தனித்தன்மை இலக்கியம், அன்றாட வாழ்வியலோடு தொடர்புள்ள தன்மை, மானுடத்தின் மீதான தாக்கம், திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள் என பல்வேறு தலைப்புகளில் இப்போட்டி அமைந்திருக்கும்.
வினாடிவினா போட்டியில் பங்கேற்க மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் டிச.21 மதியம் 2:00 மணிக்கு துவங்கி ஒரு மணி நேரம் முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும். அதில் சிறந்த மதிப்பெண் பெறும் 9 பேர் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு இறுதிப்போட்டியில் பங்கேற்பர்.
பார்வைத் திறன் குறைந்தோருக்கு உதவியாளர் ஒருவர் நியமித்து 1:20 மணி நேரம் தேர்வு நடைபெறும். போட்டிகளில் அரசு, பொதுத்துறை, அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லுாரிகளில் பணியாற்றுவோர் பங்கேற்கலாம். இதில் தேர்வு செய்யப்படுவோர் டிச.28ல் விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரி கலையரங்கில் நடைபெறும் மாநில போட்டியில் பங்கேற்பர். இவ்வகையில் மாநில அளவில் 114 குழுவினர் பங்கேற்பர். பல்வேறு நிலைகளுக்குப் பின் இறுதிப் போட்டியில் 6 குழுக்கள் பங்கேற்பர். இதில் சிறந்த மூன்று குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1.50 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.ஒரு லட்சம் வழங்கப்படும். இறுதிப் போட்டியில் பங்கேற்கும் பிற அணிகளுக்கு ஊக்கப்பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் முன்பதிவு செய்ய: 97916 30022.