ADDED : பிப் 16, 2026 05:46 AM
மதுரை: மதுரை நரிமேடு அனிதா மழலையர் பள்ளியில், கருணை உள்ளங்கள் அறக்கட்டளை, திருக்குறள் வளர்ச்சி பட்டறை சார்பில் மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் தலைமையில் திருக்குறள் திருவிழா நடந்தது. பள்ளித் தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் அண் ணாதுரை வரவேற்றார்.
வட்டார கல்வி அலுவலர்கள் ஷாஜகான், விஜயலட்சுமி, அறக்கட்டளை பொருளாளர் திருநாவுக்கரசு, பாரதி இலக்கியப் பேரவை தலைவர் முருகன், பள்ளி கவுரவ செயலாளர் விசுவநாததாசன் பேசினர். ஆசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார். ஆசிரியர் ஆசிர்வாதம் பீட்டர் தொகுத்து வழங்கினார்.
மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது. முதல் 3 பரிசுகளாக முடக்கத்தான் அரசு நடுநிலைப் பள்ளி ஸ்ரீதரன் ரூ.5000, பரவை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி சித்தார்த் ரூ. 3000, பீ.பி.குளம் பால மந்திரம் பள்ளி தேவநாதன் ரூ.2000 வென்றனர்.

