ADDED : டிச 29, 2024 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: மதுரை மாவட்டம் கால்பந்து கழகம் நடத்திய மாவட்ட அளவிலான 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இடையேயான இளைஞர் லீக் போட்டிகள் காஞ்சரம்பேட்டை கிரீன் ஸ்பரொளட் இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது.
இதில் மதுரையில் உள்ள 16 அணிகள் கலந்து கொண்டன. திருமங்கலம் நண்பர்கள் கால்பந்து குழு இளைஞர் அணியினர் 2ம் இடம் பிடித்தனர். கால்பந்து கழக தலைவர் சீனி முகைதீன் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.