/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் கோயில் லட்சுமி தீர்த்த குளம் திறப்பு
/
திருப்பரங்குன்றம் கோயில் லட்சுமி தீர்த்த குளம் திறப்பு
திருப்பரங்குன்றம் கோயில் லட்சுமி தீர்த்த குளம் திறப்பு
திருப்பரங்குன்றம் கோயில் லட்சுமி தீர்த்த குளம் திறப்பு
ADDED : ஆக 23, 2025 05:00 AM

திருப்பரங்குன்றம் : புதுப்பிக்கப்பட்ட குன்றத்து கோயில் லட்சுமி தீர்த்த குளம் திறப்பு விழா நேற்று நடந்தது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இக்குளத்தின் உள்பகுதியில் 4 மூலைகளிலும் இருந்த கருங்கல் சுவர் இடிந்து விழுந்தது. கோயில் சார்பில் அக்குளம் ரூ. 6.50 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. லட்சுமி தீர்த்த குளத்தின் பெயருக்கு ஏற்றாற் போல் மையப் பகுதியில் கருங்கல் பீடம் அமைக்கப்பட்டு அமர்ந்த நிலையில் லட்சுமியின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொலியில் குளத்தை திறந்த வைத்தார். இதைதொடர்ந்து வெள்ளிக்குடத்தில் புனித நீர் நிரப்பி பூஜை, தீபாராதனை நடந்தது. பின்பு அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா திறந்து வைத்தார். அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்மதேவன், ராமையா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சுமதி, பேஷ்கார் நெடுஞ்செழியன், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.