/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் பாதாள சாக்கடை திட்டம் என்னாச்சு;
/
திருப்பரங்குன்றம் பாதாள சாக்கடை திட்டம் என்னாச்சு;
திருப்பரங்குன்றம் பாதாள சாக்கடை திட்டம் என்னாச்சு;
திருப்பரங்குன்றம் பாதாள சாக்கடை திட்டம் என்னாச்சு;
ADDED : ஜன 05, 2025 06:25 AM

மதுரை திருப்பரங்குன்றத்தில் பாதாள சாக்கடை இல்லாததால் கழிவுநீர் தென்கால் கண்மாயில் கலந்து, சுகாதார கேடு ஏற்பட்டு நோய்த்தொற்றும் அபாயம் உள்ளது. ரத வீதிகள், சன்னதி தெருவில் தெருவிளக்குகளின் வெளிச்சம் குறைவாக இருப்பதால் பக்தர்கள்இரவு நேரங்களில் சிரமப்படுகின்றனர்.
மதுரை மாநகராட்சி 98 வது வார்டில் திருப்பரங்குன்றம் சன்னதி தெரு, மேட்டுத்தெரு, ரத வீதிகள், செங்குன்றம் பகுதிகள் இருக்கின்றன. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள ரோடுகள் சேதமடைந்தும், மேட்டுத்தெரு, சாமியாபிள்ளை தெருக்களில் ரோடு அமைக்கப்படாமலும் உள்ளன. எங்கும் திறந்தவெளி கால்வாயை காணலாம். இதுபோல அடிப்படை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தெருவிளக்குகள் இல்லை
சாமியா பிள்ளைத்தெரு ஹரிகுமார்: எங்கள் பகுதி தெருக்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தெருவிளக்குகள் வசதி போதுமானதாக இல்லாததால், இரவு, பகல் எந்நேரமும்நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகளை விளையாட அனுப்புவதில்லை. அவை பொதுமக்களை விரட்டி, விரட்டி கடிக்கின்றன. எந்த தீர்வும் இன்றி தவிக்கிறோம்.ரோடுகள் சேதமடைந்துள்ளதால் நடக்க முடியவில்லை. இதற்கு எந்த தீர்வும் கிடைக்காமல் சிரமப்படுகிறோம். பள்ளமேட்டுத்தெருவில் டிரான்ஸ்பார்மர்கள் இல்லை.
கண்மாயில் கழிவுநீர் கலக்கிறது
மேட்டுத்தெரு குரு: எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை இன்றி கழிவுநீர் எளிதாக தென்கால் கண்மாயில் கலந்து விடுகிறது. இதனால் மழைக்காலங்களில் நிரம்பி தெரு முழுவதும் பரவுவதால் கொசுத்தொல்லை, நோய் தொற்று அதிகமாக உள்ளது. குப்பையை கொட்டபெரிய தொட்டிகள் வைத்தால் நன்றாக இருக்கும். மழைநீர் வடிகால் இல்லாததும், முதன்மை பிரச்னையாக உள்ளது.செங்குன்றம் பகுதியில் அடிப்படை வசதிகளே இல்லாமல் அப்பகுதியினர் கஷ்டப்படுகின்றனர்.
வருட நிதியை உயர்த்த வேண்டும்
கவுன்சிலர் சுவிதா: இப்பகுதி பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக மாறியதால் நிறைய திட்டங்கள் தற்போதுதான் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டுக் குடிநீர்திட்டப் பணிகள் நடக்கின்றன. இதனால் ரோடு அமைத்த சிலநாளிலேயே திரும்பவும் சீரமைக்க வேண்டும். கூடுதல் செலவுகள்தான் ஏற்படும்.சில தெருக்களில் சமீபத்தில் தான் ரோடுகள் அமைத்தோம். யு.ஜி.டி., திட்டம் நடப்பதால், தாமதம்ஆகலாம்.
ஆனால் கண்டிப்பாக ரோடு, மழைநீர் வடிகால் அமைக்கப்படும். புதிய சுகாதார மையம் அமைத்துள்ளோம் அதற்கு தேசிய தரச்சான்று பெற ரூ 10லட்சம் தேவைப்படுகிறது. கால்வாய் துார்வாரப்படுவதில் சிரமம் உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையும் இருக்கிறது.
குப்பைக்கு காம்பாக்ட் பின் கேட்டுள்ளோம். 130 தெருவிளக்குகள் புதிதாக அமைத்துள்ளோம். தெருநாய்கள் பிரச்னை விரைவில் சரியாகும். ரேஷன் கடைகளுக்கு போதிய இடவசதி இல்லை. பெரிய இடம் வேண்டும். ஆண்டு நிதியை சற்று உயர்த்தி ரூ. 50 லட்சம் என கொடுத்தால் விரைந்து முடிப்போம்.
இது தவிர என்னால் முடிந்த சிறு உதவிகள் செய்கிறேன் என்றார்.