/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு; டி.எஸ்.பி.,யிடம் சி.பி.ஐ., விசாரணை கைதான போலீசாரில் சிலர் 'அப்ரூவராக' மாற திட்டம்

ADDED : ஆக 07, 2025 05:28 AM
மதுரை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் கைதான 5 தனிப்படை போலீசாரிடமும், 'சஸ்பெண்ட்' டி.எஸ்.பி., சண்முகசுந்தரத்திடமும் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், பேராசிரியை நிகிதாவின் நகை மாயமான புகார் குறித்த விசாரணையில் தனிப்படை போலீசாரால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். போலீசார் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீசாரை 2 நாள் காவலுக்கு எடுத்து விசாரித்தது.
சி.பி.ஐ., போலீசார் 23 நாட்கள் சேகரித்த விபரங்கள், ஆதாரங்கள் குறித்து கைதான போலீசாரிடம் கேட்டனர். அவர்களின் அலைபேசி அழைப்புகள் குறித்தும் ஆய்வு செய்தனர். அதிகாரிகளின் அறிவுறுத்தல்படியே அஜித்குமாரிடம் விசாரித்ததாக போலீசார் தெரிவித்தனர். யார் அந்த அதிகாரிகள், என்ன அறிவுரை வழங்கினார்கள் என்பது குறித்து கேட்டறிந்தனர். அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரத்திடம் நேற்று சி.பி.ஐ., 5 மணி நேரம் விசாரித்தது. போலீசாருக்கு என்ன அறிவுரை வழங்கினீர்கள், உங்களுக்கு உயர் அதிகாரிகள் அறிவுரை ஏதும் கூறினார்களா எனக் கேட்டறிந்தனர்.
இதற்கிடையே சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், அரசு தரப்பில் தனக்கு எந்த ஆதரவும் கிடைக்காததால், எல்லா உண்மைகளையும் சொல்லிவிடுவதாக கூறி 'அப்ரூவராக' மாற விருப்பம் தெரிவித்தார். ஆனால் கோர்ட் அனுமதியளிக்கவில்லை. இதன்காரணமாக காலம் கடத்தாமல் இப்போதே அப்ரூவராக மாற, அஜித்குமார் கொலை வழக்கில் கைதான போலீசாரில் சிலர் திட்டமிட்டுள்ளனர்.