நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருநகரில் திருவள்ளுவர் சிலைக்கு தளபதி எம்.எல்.ஏ., மாலை அணிவித்தார். கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, சிவா கலந்து கொண்டனர்.
ஹார்விப்பட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகிலுள்ள அவரது சிலைக்கு மன்ற தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் மாலை அணிவித்தனர். பொருளாளர் அண்ணாமலை, செயலாளர் குலசேகரன், செயற்குழு உறுப்பினர் வேட்டையார், நிர்வாகிகள் துர்காராம், துளசிதாஸ், இளைஞரணி அரவிந்தன், பாஸ்கர்பாண்டி, கார்த்திக் பங்கேற்றனர். தொன்மை அறக்கட்டளை சார்பில் டாக்டர் ஹனிமன் தலைமையில் நாகராஜன், ஜீவா மாலை அணிவித்தனர்.

