/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல...: கண்ட இடங்களில் அனுமதியின்றி விளம்பரம்: நீதிமன்ற கட்டுப்பாடு, வழிகாட்டல் என்னாச்சு
/
இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல...: கண்ட இடங்களில் அனுமதியின்றி விளம்பரம்: நீதிமன்ற கட்டுப்பாடு, வழிகாட்டல் என்னாச்சு
இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல...: கண்ட இடங்களில் அனுமதியின்றி விளம்பரம்: நீதிமன்ற கட்டுப்பாடு, வழிகாட்டல் என்னாச்சு
இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல...: கண்ட இடங்களில் அனுமதியின்றி விளம்பரம்: நீதிமன்ற கட்டுப்பாடு, வழிகாட்டல் என்னாச்சு
ADDED : ஜன 21, 2025 06:15 AM

மதுரை: 'விளம்பர போர்டுகள், ஹோர்டிங்குகள் வைக்க கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், நெடுஞ்சாலை பாலங்களில் அனுமதியின்றி விளம்பரம் செய்வதாக' சர்ச்சை எழுந்துள்ளது.
மதுரை நகரில் விளம்பர போர்டுகள், ஹோர்டிங்குகள் வைப்பதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. விளம்பர போர்டுகள், பேனர்களால் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ள நிலையில் உள்ளாட்சி மன்றங்களின் அனுமதி பெற்று வைப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகள், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன. ஆனாலும் அதை கண்டுகொள்ளாமல் சாலை சந்திப்புகள், பெரிய கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், பாலங்களில் பெரிய விளம்பர பதாகைகள், பலகைகள், ஹோர்ட்டிங்குகள் வைப்பது தொடர்கிறது. இதுதொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் வழக்கமாகி விட்டது.
நீதிமன்ற உத்தரவுபடி அரசும் மாவட்ட நிர்வாகங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இந்நிலையில் விளம்பர போர்டு விஷயத்தில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்படுவதாக கோவை கன்ஸ்யூமர் காஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர்மதியோன் என்பவர் நெடுஞ்சாலைத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதில் அரசின் உத்தரவை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழக நெடுஞ்சாலைத் துறை செயலர் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் விளம்பர போர்டுகள் தொடர்பான அரசின் உத்தரவை சுட்டிக் காட்டி, விளம்பர பலகைகள் வைக்க எவ்வித அனுமதியும் வழங்கவில்லை. ரோடுகள், மையத்தடுப்புகளில் விளம்பர பலகைகள் வைக்க அனுமதி கொடுத்திருந்தால் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆனாலும் மதுரை நகருக்குள் உள்ள பாலங்களில் விளம்பரம் செய்வது தொடர்பாக என விளம்பரம் செய்து சிறிய ஹோர்டிங்குகள் மின்கம்பங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்நிறுவனத்தில் விசாரித்தபோது 'அனுமதி பெறப்பட்டுள்ளது' என்றனர். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'நெடுஞ்சாலைத் துறையில் 5 ஆண்டுகளாக விளம்பரம் செய்ய அனுமதி வழங்கவில்லை. வைத்திருந்த விளம்பரங்களைக்கூட அகற்றி இருக்கிறோம். இப்போதும் நெடுஞ்சாலை மேம்பாலங்களில் யாருக்கும் விளம்பரம் செய்ய அனுமதி வழங்கவில்லை' என்றனர்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது 'மாநகராட்சியிலும் அனுமதி வழங்கவில்லை' என்றனர். நெடுஞ்சாலைத் துறை அனுமதி வழங்காவிடில், யார் வழங்கினர் என்பது கேள்விக்குறியாக உள்ளது.