UPDATED : அக் 25, 2026 07:09 PM
ADDED : அக் 25, 2026 07:06 PM
மதுரை: மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் மாமதுரை கவிஞர் பேரவை சார்பில் சிந்தனை கவியரங்கம் நடந்தது.
பேரவை தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். கவிஞர் ரவி வரவேற்றார். பொருளாளர் கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் வரதராஜன், புரட்சிக் கவிஞர் மன்றத் தலைவர் வரதராஜன் முன்னிலை வகித்தனர்.
‘திருக்குறள் காட்டும் வாழ்வியல்’ தலைப்பில், கவிஞர்கள் பொன்பாண்டி, தமிழன்பன் உட்பட பலர் கவிதை பாடினர். சிறப்பாக கவிதை வாசித்த விமலாவுக்கு, வீரபாண்டியத் தென்னவன் விருது வழங்கினார். ‘மாண்புமிகு மனைவி’ நுாலுக்காக கவிஞர் ரவிக்கு ‘மதுரைத் தென்றல்’ விருது வழங்கினர். யுனெஸ்கோ அமைதி இளைஞர்கள் திட்டத்துக்கு தேர்வான துபாய் தமிழர் கவுரி சங்கர் சிவபாலா, மதுரை உலா நற்பணி மன்ற தலைவர் கார்த்திகேயன் பங்கேற்றனர். தலைமை பொறுப்பாளர் ஆதிசிவத் தென்னவன் நன்றி கூறினார்.
