/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
த.வெ.க., நிர்வாகி மீது மிரட்டல் புகார்
/
த.வெ.க., நிர்வாகி மீது மிரட்டல் புகார்
ADDED : அக் 02, 2025 03:36 AM
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அடுத்த பூதக்குடி கோவர்த்தனபுரத்தை சேர்ந்தவர் கதிரேசன் 58, முன்னாள் தொழிற்சங்க நிர்வாகி.
இவர் கரூரில் நடந்த த.வெ.க., கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அரசியல் கட்சி மாநாடு, கூட்டங்கள் நடத்த உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடும் வரை த.வெ.க., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் சாலைகளில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு நாளை (அக்.,3) விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் த.வெ.க., பூதக்குடி கிளை செயலாளர் வினோத்குமார் 38, இந்த வழக்கு குறித்து கதிரேசனிடம் விசாரித்து வாபஸ் வாங்க கூறியுள்ளார். இதில் தனக்கு மிரட்டல் விடுத்ததாக கதிரேசன் அளித்த ஆன்லைன் புகாரில் அலங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.