/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டூ - வீலரில் வேன் மோதி சிறுமி உட்பட மூவர் பலி
/
டூ - வீலரில் வேன் மோதி சிறுமி உட்பட மூவர் பலி
ADDED : பிப் 16, 2026 06:48 AM

திருமங்கலம்: சிகிச்சைக்காக குழந்தையை டூ -- வீலரில் அழைத்துச் சென்ற போது, வேன் மோதி மூவர் பலியாகினர்.
மதுரை மாவட்டம், கருமாத்துாரைச் சேர்ந்தவர் ராஜகுரு, 27; கட்டட தொழிலாளி. இவரது அண்ணன் ராஜ்குமார் மகள் பிரமிளாஸ்ரீ, 7. ராஜ்குமார் ஒரு வழக்கில் கைதாகி, கடலுார் சிறையில் உள்ளார். அவரது மனைவியும் இறந்த நிலையில், சித்தப்பா ராஜகுரு, சிறுமியை வளர்த்தார்.
இந்நிலையில், உடல் நலம் பாதித்த சிறுமியை, கருமாத்துார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, ஒரே டூ - வீலரில், ராஜகுரு, பிரமிளாஸ்ரீ, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சங்கீதா, 29, ஆகியோர் சென்றனர்.
கோவிலாங்குளம் அருகே சென்றபோது, தேனியில் இருந்து மதுரைக்கு, உசிலம் பட்டியைச் சேர்ந்த டிரைவர் பாண்டி, 43, ஓட்டிச் சென்ற வேன், இவர்களின் டூ - வீலர் மீது மோதியது.
இதில், ராஜகுரு சம்பவ இடத்திலேயே பலியானார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரமிளாஸ்ரீ, சங்கீதா நேற்று காலை உயிரிழந்தனர். பாண்டியை, செக்கானுாரணி போலீசார் கைது செய்தனர்.

