ADDED : ஜன 30, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: செல்லம்பட்டி ஒன்றியம் கோவிலாங்குளத்தில் குண்டுமணி, எ.கன்னியம்பட்டியில் தங்கமலை கடைகளில் புகையிலை விற்றது தெரிந்தது.
கடைகளுக்கு எஸ்.ஐ., கணேசன் மற்றும் போலீசார் முன்னிலையில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் ராஜ்குமார் 'சீல்' வைத்தார். உசிலம்பட்டி ஒன்றியம் அயோத்திபட்டி சுப்பிரமணியன், பெருமாள்கோயில்பட்டியில் செல்வி கடைகளுக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.