/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் இன்று அ.தி.மு.க., ஜெ., பேரவை உண்ணாவிரதம்
/
மதுரையில் இன்று அ.தி.மு.க., ஜெ., பேரவை உண்ணாவிரதம்
மதுரையில் இன்று அ.தி.மு.க., ஜெ., பேரவை உண்ணாவிரதம்
மதுரையில் இன்று அ.தி.மு.க., ஜெ., பேரவை உண்ணாவிரதம்
ADDED : அக் 09, 2024 04:17 AM
மதுரை : தமிழகத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் எனும் தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி உள்ளிட்டவைகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் இன்று(அக்.9) அ.தி.மு.க., ஜெ. பேரவை சார்பில் உண்ணாவிரதம் நடக்கிறது.
மாநில செயலாளர் உதயகுமார் தலைமை வகிக்கிறார். பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ துவக்கி வைக்கிறார்கள். மாலையில் துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., நிறைவு செய்து வைக்கிறார்.
ஏற்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு செய்த உதயகுமார் கூறியதாவது: தி.மு.க.,வின் 3 ஆண்டுகள் ஆட்சியில் மக்கள் சேவையில் பூஜ்யமாக உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆதரிக்க மக்கள் தயாராகி விட்டனர். 2019ல் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகள் 2024ல் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
ஆனாலும் கூட 2019ஐ விட 2024ல் அ.தி.மு.க.,வுக்கு 2 சதவீதம் ஓட்டுகள் அதிகம் கிடைத்தன. மக்கள் நலத்திட்டங்களை வைத்து தான் மக்களின் ஓட்டுகளை பெற முடியும். வசீகரத்தை (விஜய்) வைத்து மக்களிடம் ஓட்டுகளை பெற முடியும் என நினைப்பு தமிழக அரசியலில் எடுபடாது என்றார்.

