/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்று இனிதாக .... ( 22.11.2025) மதுரை
/
இன்று இனிதாக .... ( 22.11.2025) மதுரை
ADDED : நவ 22, 2025 04:19 AM
கோயில் ஷீரடி சாய்பாபாவின் புனித பாதுகைகளின் தரிசனம்: முக்தி நிலையம், திருமங்கலம், காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:00 முதல் 6:00 மணி வரை.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி.
பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராம கிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
சொற்பொழிவு, கூட்டுப்பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, இரவு 7:00 மணி.
45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: கீதா பாரதி, முன்னிலை: தாரணி கார்த்திக், விநாயகர், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான இலக்கியப் போட்டி: மங்கையர்க்கரசி நடு நிலைப்பள்ளி, மணிநகரம் மெயின் ரோடு, மதுரை, ஏற்பாடு: பொன்னகரம் திருக்கார்த்திகை அபிஷேக விழாக்குழு, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.
பொது சர்வதேச ஹாக்கி விளையாட்டரங்கம் திறப்பு: ரேஸ்கோர்ஸ், மதுரை, துவக்கி வைப்பவர்: துணை முதல்வர் உதயநிதி, மாலை 6:00 மணி.
மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப் படுத்தும் 'சரஸ் மேளா', உணவுத் திருவிழா: தமுக்கம், மதுரை, துவக்கி வைப்பவர்: துணை முதல்வர் உதயநிதி, ஏற்பாடு: மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாலை 6:30 மணி, கண்காட்சி நேரம்: இரவு 9:00 மணி வரை.
'மகாத்மா காந்தியின் தொகுப்பு நுால்கள் - பகுதி 17' நுால் மதிப்பாய்வுரை கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, மதிப்பாய்வுரை வழங்குபவர்: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 5:00 மணி.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான இலவச பயிற்சி: கோவிந்த தாஸ சேவா சமாஜம், மஹால் 6வது தெரு, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிர சபா, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
கவிஞர் ரா. ரவியின் மின்னல் ஹைக்கூ நுால் மதிப்புரை கூட்டம்: அல்அமீன் பள்ளி, கோ.புதுார், மதுரை, முன்னிலை: தலைமை ஆசிரியர் ஷேக் நபி, ஏற்பாடு: மதுரை வாசகர் வட்டம், மாலை 4:00 மணி.
கண்காட்சி நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை.
பட்டுச் சேலைகள் கண்காட்சி, விற்பனை: திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்கம் கிளைகள், 141, கீழவெளிவீதி, தவிட்டுச்சந்தை, மதுரை, 12, சேர்மன் துளசிராம் 2வது தெரு, மதுரை, ஏற்பாடு: திகோ சில்க்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
தேசிய புத்தகக் கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலக்கோபுரத் தெரு, மதுரை, காலை 9:30 முதல் இரவு 8:30 மணி வரை.

