UPDATED : செப் 01, 2026 11:20 PM
ADDED : செப் 01, 2026 07:43 PM
செப்.2
கோயில்
திருத்தல விழா: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணா நகர், மதுரை, தொழிலாளர் தின திருப்பலி, நிகழ்த்துபவர் -- பாதிரியார் தாமஸ், காலை 11:30 மணி, மாலை திருப்பலி: நிகழ்த்துபவர்கள் --- பாதிரியார்கள் ஜெய் ஜோசப், ஜோசப், புதுார் லுார்தன்னை சர்ச் பாடகர் குழுவின் இசை நிகழ்ச்சி, மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு * திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* திரிவேணி விழா, சிவானந்த ஜெயந்தி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் -- சுவாமி வேதாந்த ஆனந்தா சரஸ்வதி, காலை 6:00 மணி, கீதா பாரதி குழுவினரின் இசை நிகழ்ச்சி, தலைமை: சுவாமி சுந்தரானந்தா சரஸ்வதி, சிறப்புரை: பேராசிரியர் ரேவதி சுப்புலட்சுமி, மாலை 6:00 மணி முதல்.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ராதா கல்யாண வைபவம்: நிகழ்த்துபவர் -- கடையநல்லுார் பிரகாஷ் பாகவதர் குழுவினர், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 மணி முதல்.
பொது * காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு நதிகள் இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: மண்டல நீர்வளத்துறை அலுவலகம் முன்பு, தல்லாகுளம், மதுரை, முன்னிலை: பொதுச்செயலாளர் அர்ச்சுனன், ஏற்பாடு: காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, காலை 10:00 மணி முதல்.
* தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம்: சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்குமாசி வீதி, மதுரை, சிறப்பு விருந்தினர்: குடிநீர் வடிகால் மண்டல தலைமை பொறியாளர் கணேஷ், முன்னிலை: சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜ்குமார், காலை 9:00 மணி முதல்.
* கண் தான விழிப்புணர்வு நடைபயணம்: அரசு மருத்துவமனை, மதுரை, துவக்கி வைப்பவர்: டீன் அருள்சுந்தரேஷ்குமார், ஏற்பாடு: கண் மருத்துவத்துறை, காலை 9:00 மணி முதல்.
பள்ளி, கல்லுாரி * செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய இணைய வழி ஆசிரியர் மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்புரை: புதுச்சேரி பல்கலை பேராசிரியர் வெங்கடேஷ்குமார், மாலை 6:30 மணி.
* புதிய மாணவர்களை வரவேற்கும் விழா: சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம்., பொறியியல் கல்லுாரி, அழகர்கோவில், சிறப்பு விருந்தினர்: யூனிக் இண்டஸ்டிரியல் ஆட்டோமேஷன் நிறுவன நிர்வாக இயக்குநர் குமரன்முத்துசாமி, தலைமை: கல்லுாரி தலைவர் பாஸ்கரன், முன்னிலை: முதல்வர் நவநீதகிருஷ்ணன், காலை 10:00 மணி.
மருத்துவம் * குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, தெற்குவாசல், மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
* குழந்தைகள் கற்றல் சிரமம் - இலவச மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் ரஹுமத் நிஷா, ஆஸ்மா பாட்ஷா, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.
