ADDED : மார் 02, 2025 04:33 AM
கோயில்
மாசி மகம் தெப்பத்திருவிழா கொடியேற்றம்: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, காலை 9:00 மணிக்குமேல் 10:30 மணிக்குள், அன்னவாகனத்தில் ராஜாங்க சேவை, இரவு 7:00 மணி.
மாசிப் பெருந்திருவிழா: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, முகூர்த்தக்கால் நடுதல், காலை 10:00 முதல் 11:00 மணிக்குள், வாஸ்துசாந்தி, மாலை 6:30 மணி.
கும்பாபிஷேகம்: செல்வ விநாயகர் கோயில், வேளாண் உணவு வர்த்தக மையம், சிக்கந்தர் சாவடி, 4ம் கால யாக பூஜை, காலை 8:50 மணி, பூர்ணாகுதி, தீபாராதனை, காலை 10:45 மணி, மஹா கும்பாபிஷேகம், காலை 11:00 மணி.
மகா சிவராத்திரி விழா - திருக்கல்யாணம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், 16, வடக்கு மாசி வீதி, மதுரை, காலை 10:30 முதல் 11:30 மணிக்குள், பிரசாதம் வழங்குதல், மதியம் 12:00 மணி, கரகத்துடன் முளைப்பாரி, மஞ்சள் நீராட்டு, பாரிவேட்டை, இரவு 11:30 மணி.
மாசித்திருவிழா கொடியேற்றம்: துரோபதையம்மன் கோயில், திருவாதவூர், மாலை 6:00 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, 40, விசுவாசபுரி 5வது தெரு, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
சித்தர்கள் குறித்து கருத்தரங்கம்: நிகழ்த்துவோர் - ஞானசம்பந்தன், இளங்கோ, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி
மாணவர் அணியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்: கொடிமங்கலம், கோயில் வளாகத் துாய்மைப்பணி, காலை 7:00 மணி, சத்துணவு நிபுணர் பாலமுருகனின் 'ஆம்புலன்ஸ் சத்தமில்லாத ஆரோக்கியமான தமிழகம் படைப்போம்' கருத்துரை, காலை 10:30 மணி, அக்குபஞ்சர் சிகிச்சையாளர் சுஜாதாவின் 'உங்கள் உடல்நலம் உங்கள் கையில்' கருத்தரங்கு, மதியம் 2:30 மணி, மாணவர்களின் பாட்டுக்கு பாட்டு, ஏற்பாடு: யாதவர் கல்லுாரி, மாலை 6:00 மணி.
பொது
ஸ்டீல் குளோப் திறப்பு விழா: வேளாண் உணவு வர்த்தக மையம், சிக்கந்தர் சாவடி, தலைமை: நிறுவனர் ரத்தினவேலு, திறந்து வைப்பவர்: தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குநர் ஹரி தியாகராஜன், காலை 10:00 மணி.
கட்டுமான தொழிலாளர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி: அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தேன்மொழி, சிறப்புரை: இன்ஜினியர்ஸ் கிளப் மாநிலத் தலைவர் செல்வதுரை, ஏற்பாடு: ஸ்ரீபூ கல்சுரல் அகாடமி, அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம், இன்ஜினியர்ஸ் கிளப் தமிழ்நாடு காலை 10:00 மணி.
சுற்றுலா கலைவிழா: கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், கீழக்கரை, அலங்காநல்லுார், நையாண்டி மேளம், பூங்கரகம், அடுக்கு கரகம், ஏற்பாடு: தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை, மாலை 5:00 மணி.
மகளிர் தினத்தை முன்னிட்டு சுடரொளி மகளிர் விருது விழா: செய்தியாளர் அரங்கம், மாட்டுத்தாவணி, மதுரை, தலைமை: வழக்கறிஞர் கஜேந்திரன், சிறப்பு விருந்தினர்கள்: புலவர் சன்னாசி, மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி பேராசிரியர் புவனேஸ்வரி, கவிஞர் மகேந்திர பாபு, ஏற்பாடு: சென்னை கூத்துப்பட்டறை, பைந்தமிழ் வலையொளி, காலை 10:00 மணி.
'நீரின்றி அமையாது உலகு' - வைகையை பாதுகாப்பது குறித்து கருத்தரங்கு: ராமானுஜர் பக்த சபை, கூடலழகர் பெருமாள் கோயில் அருகில், மதுரை, ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், மாலை 5:00 மணி.
கண்காட்சி
மீனாட்சி பேன் ஹவுசின் ஏ.சி., கண்காட்சி, விற்பனை: மதுரா கோட்ஸ் மில் அருகில், நியூ ஜெயில் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

