ADDED : நவ 15, 2024 05:59 AM
கோயில்
திருபவித்ர உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சந்திரசேகரர் அலங்காரம், சுவாமி சன்னதி 2ம் பிரகாரம் வலம் வந்து சேத்தியாதல், காலை 9:00 மணி,
நின்றசீர் நெடுமாற நாயனாரின் குருபூஜை: நால்வர் சன்னதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை. நடத்துவோர்: செந்தில் பட்டர், ஹாலாஸ் பட்டர், திருஞான சம்பந்தர், மங்கையர்க்கரசி, நெடுமாற நாயனார், சுவாமி, அம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு, மாலை 6:00 மணி, திருக்கார்த்திகை உற்ஸவம்: அம்மனும், சுவாமியும் பஞ்சமூர்த்திகளுடன் ஆடி வீதியில் உலா, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.
மண்டலாபிஷகேம்: சித்தி விநாயகர் கோயில், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 6:00 மணி.
தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.
வைகை பவுர்ணமி தீபாராதனை: பேச்சியம்மன் படித்துறை, மதுரை, ஏற்பாடு: வைகை ராஜன், மாலை 5:30 மணி.
அன்னாபிஷேகம்: முனியான்டி சாமி கோயில், 2வது யூனியன் பேங்க் காலனி, விளாங்குடி, மதுரை, விஷேச நிவேத்தியம், ஏற்பாடு: நிர்வாகி சரவணன், மாலை 5:00 மணி
பக்தி சொற்பொழிவு
திருக்குறள்: நிகழ்த்துபவர் - பெரியகருப்பன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
நாராயணீயம்: நிகழ்த்துபவர் - எம்.வி. சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
அதிநவீன மின் எரிவாயு மயானம் பணி துவக்கம்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, துவக்கி வைப்பவர் அமைச்சர் மூர்த்தி, முன்னிலை: மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், துணை மேயர் நாகராஜன், ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காலை 9:30 மணி.
பழைய இரும்பு மொத்த வியாபாரிகள் சங்க இணைப்பு விழா: அங்கயற்கண்ணி திருக்கண் கல்யாண மண்டபம், வைகை வடகரை, மதுரை, தலைமை: மண்டல தலைவர் மைக்கேல்ராஜ், முன்னிலை: மாநில துணைத் தலைவர் சூசை அந்தோணி, சிறப்புரை: மாநில தலைவர் முத்துகுமார், ஏற்பாடு: தமிழ்நாடு மதுரை மாவட்ட பழைய இரும்பு வியாபாரிகள் சங்கம், காலை 10:30 மணி.
சத்யா துவக்க விழா: மேலமாசி வீதி, மதுரை, 11ஆம் ஆண்டு துவக்க விழா, ஏற்பாடு: நிர்வாக இயக்குனர் ஜா.ஜான்சன், காலை 9.15 மணி.:
ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் 2 ம் தொகுப்பு துவக்கவிழா: துவக்கி வைப்பவர்: அமைச்சர் மூர்த்தி, அய்யர் புதுார், வீரபாண்டி, ஊமச்சிகுளம் - அலங்காநல்லுார் சாலை, மதுரை, காலை 11:30 மணி.